Girl in a jacket

 

பொருளின் பொருள் கவிதை

படைப்பின் இரகசியமே கவிதையை உணர்ந்துகொள்வதில் அடங்கிவிடுகிறது. இலக்கிய உலகின் எல்லாவித ஐயப்பாடுகளும் கவிதையை அறிந்து கொள்வதில் இருக்கிறது. எந்த உண்மையையும் உணர்ந்து கொள்வதில் கவிதை இருக்கிறது, குழந்தைப் பருவத்தில் நாம் பெற்றோரிடமிருந்து தெரிந்துகொண்ட பாலர் கதைகள் இளம் பருவத்தில் நாம் கண்டு கேட்டு தெரிந்தவைகள் இவை எல்லாமே கவிதை உணரப்படுவதற்கு உதவி செய்யும். பிரபஞ்சத்தின் இரகசியமே அந்த உணர்வுதான்.

முதல் பதிப்பு : 1983

வெளியீடு : வேள் பதிப்பகம்
வீடு பேறு

இந்த இருபது கதைகளிலும் முத்துக்கறுப்பன் என்று ஒரு கேரக்டர் வருகிறார். அவர் குடியிருப்பது, நண்பர்களுடன் சல்லாபிப்பது. சாவது எல்லாமே இடம் பெறுகின்றன. இது யார்-ஆசிரியரா, நீங்களா நானா என்கிற புதிரை விடுவிப்பது ஒரு சுவாரசியமான அறிவியல் பயிற்சியாக அமைகிறது. ஆசிரியரின் அறிவியல் பண்பாடு பரப்பு இந்தக் கதைகளில் துல்லியமாகத் தெரிகிறது...

லேசான விஷயமானாலும், கனமான விஷயமானாலும் ஒரு உருவப்பிரக்ஞையுடன் சிறுகதைகளை சிருஷ்டித்திருக்கிறார் ஆசிரியர். மைலாப்பூர் ஜங்ஷன் கிராமம் மற்றும் பல இடங்கள் வெறும் இடங்கள் மட்டுமல்ல; பயணங்களில் ஒரு பகுதி என்பதை அழகுபட நம்மை உணரச் செய்கிற கலை இருக்கிறதே இது தமிழில் புதுசு. தனித்துவம் பெற்றது என்று சொல்ல வேண்டும். மா. அரங்கநாதனின் வீடுபேறு என்கிற இந்நூல் பலருக்கும் நூதன அனுபவமாகவே அமையும் என்று எனக்குத் தோன்றுகிறது.

முதல் பதிப்பு : நவம்பர் 1987

வெளியீடு : வேள் பதிப்பகம்பறளியாற்று மாந்தர்

"உலகின் இந்தப் பகுதியைப் பொறுத்தவரை மலைவாழ் மக்களும், மாடுகளைக் காத்து நின்றோரும், மீனவரும்தான் நம் முன்னோர்... எனது சாதியைத் தெரிந்து கொள்ளலாம்... முன்னோரை அறிந்து கொள்ள முடியும்... ஆனாலும்.. நான் யார் என்று எனக்குத் தெரியவில்லையே..." தமிழே பழமைதான். புதுமையும் புதுக் கவிதையும் உள்ள ஒரே ஆதிகால மொழியும் அதுவே என்கிற வகையில் படைப்புகள் வரவேண்டிய காலத்தில் வரும் நாவல். மனிதனின் கூறுகளையே வெவ்வேறு பிராயங்களிலும் நிலைகளிலும் கூறும் தனியான ஒரு புனைகதைப் பாணியைத் தனக்கென வதுத்துக்கொண்ட எழுத்தாளரின் நாவல். தன்பெயேரே அழிந்துபட்டு இல்லாமலாகி விடும் விதத்தில் நின்று நிலவுகிற ஒருவன் அல்லது பலரது உயர்ந்த உறுதிப் பொருட்களின் தேடல் இது.

பதிப்பு : 1991

வெளியீடு : வேள் பதிப்பகம்


காடன் மலை

அரங்கநாதன் தமிழில் புலமையும் அந்தப் புலமையை மீறிய எளிமையும் கொண்டிருக்கிறார். அதுவே அவருக்கு அவர் சிறுகதைகளுக்கு மரபு ரீதியான ஒரு சிந்தனை வளத்தை அளிக்கிறது.


முதல் பதிப்பு : அக்டோபர், 1995

வெளியீடு : தாமரைசெல்வி பதிப்பகம்


மா. அரங்கநாதன் கதைகள்

எனக்கு அரங்கநாதன் அவர்களின் கதைகள் பரிச்சயம் ஆனது பெரும் பாலும் முன்றில் பத்திரிகை அரம்பிக்கப்பட்ட பிறகுதான் என எண்ணுகிறேன். ஏதோ ஒரு கதையைப் படித்தேன். கதை நினைவில்லை ஆனால் அந்தக் கதை என்னை இவர் யார் என அறிந்து கொள்ளத் தூண்டியது. அதன் பின்பு உவரி என்ற கதையைப் படித்தபோது வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு தன்மையைத் தொடர்ந்து போய்க் கொண்டிருப்பவர் இவர் என மனதில் உறைத்தது. அன்றிலிருந்து இவர் கதைகள் எங்குத் தென்பட்டாலும் படிக்க ஆரம்பித்தேன் - தமிழவன்

முதல் பதிப்பு : நவம்பர் 2000

வெளியீடு : வேள் பதிப்பகம்

மா. அரங்கநாதன் கட்டுரைகள்

மா. அரங்கநாதன் நாஞ்சில் நாட்டுக்காரர். இவர் இப்போது சென்னை வாசிதான். இவரது எழுத்துக்களில் பறளியாற்று மாந்தர்கள் மிகுதி. எனினும் பட்டணத்துவாசிகளும் வாழ்வுக்காகப் போராடிக் கொண்டிருப்பார்கள். இவர் சிறுகதை, நாவல் போன்றவற்றில் முத்திரை பதித்தது போன்றே இலக்கிய விமர்சனத்திலும் ஈடுபட்டு வருவார். இது இவரது விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு.

முதல் பதிப்பு : டிசம்பர் 2003

வெளியீடு : காவ்யா

சிராப்பள்ளி

அனைத்து கதைகளிலும் முத்துக்கறுப்பன் ஊடாடுவான். அவன் பெயரில் ஒரு டீக்கடையாவது இருக்கும். அல்லது அவன் பெயரில் கள்ள ஓட்டாவது போட்டு விடுகிறார்கள். முத்துக் கறுப்பனா முத்துக் கருப்பனா என்பது கூட ஒரு பிரச்சனைதான். மா. அரங்கநாதனது எழத்துச் சிறப்பே இப்படி ஒரு பாத்திரம் தப்பு, பல பாத்திரங்கள் ஒரே பெயரில் வந்து போவது வித்தியாசமான முயற்சி. நானும் என் படைப்புகளில் 'ஆறுமுகங்களை' படைப்பதற்கு இவரே உந்து சக்தி. இது சங்கர்லால் போலவோ கணேஸ் வசந்த் போலவோ அல்ல. இவர் கதைகளில் இவர்தான் முத்துக் கறுப்பனா என்று பல இடங்களில் எண்ணத் தோண்றும்.

முதல் பதிப்பு : நவம்பர் 2007

வெளியீடு :காவ்யா
ஞானக் கூத்து

ஒவ்வொரு கதையும் ஒரு அனுபவமாக அமைகிறது என்று சொல்வது மட்டும் போதாது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கதையைப் படிக்கிற போதும் மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூண்டுகிற ஒரு அம்சம் இதில் இருக்கிறது. அந்த கனம் அரங்கநாதனின் ஒரு ஸ்பெஷாலிட்டி என்றும் சொல்லலாம். திருப்பித் திருப்பி படிப்பதற்கு இதில் விஷயமிருக்கிறது. இதை வெறும் கதையாகச் சொல்லியிருந்தால் சம்பவமாகச் சொல்லியிருந்தால், சம்பவம் முடிந்துவிட்டது-கதையை முடித்த பிறகு அந்த சம்பவம் ஞாபகம் இருக்கும். அந்த சம்பவத்திற்கு முந்தைய சம்பவமும் ஞாபகமிருக்கும். திருப்பி எடுத்து படிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அந்த சம்பவங்களைச் சொல்வதில் இவர் ஓர் உத்தியைக் கையாளுகிறார்.

பதிப்பு : 2008

வெளியீடு : காவ்யா

காளியூட்டு

காளியூட்டு ஏற்கனவே சொல்லப்பட்டதை நிலை நிறுத்தப் பட்டதை தவிர்த்துவிட்டு தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. அந்த வகையில் புதுநாவல். எழுதப்பட்ட பக்கங்களில் இல்லாமல் அறிந்துகொள்ளும் விதமாக உள்ள நாவல். புதிதாக எழுதப்பட்டது என்பதோலேயே ஒரு நாவல் புதிது இல்லை என்றும் அதன் கலைப்படைப்பால் புதுமை கொள்கிறது என்று அதன் காரணமாகவே சொல்லப்படுகிறது.

விமர்சனம் என்பது மூலத்தைப் படிக்க வைப்பதுதான். இந்த விமர்சனமும் அதைத்தான் சார்ந்து உள்ளது.

எனக்கு காளியூட்டு மகிழ்ச்சிகரமான அனுபவத்தை வாசிப்பின் வழியாகத் தந்தது. அதனை மற்றவர்கள் வாசிப்பின் வழியாக பெற, காளியூட்டை வாசிக்கவேண்டுமென்று சொல்கிறேன்.

முதல் பதிப்பு : 2008

வெளியீடு : காவ்யா
கடவுளுக்கு இடங்கேட்ட கவிஞன்

தமிழில் நுட்பமும் திட்பமும் கொண்ட எழுத்தாளர்கள் என்று சிலரைத் தேர்ந்தெடுத்தால் அவர்களில் திரு. மா. அரங்கநாதன் அவர்களின் பெயரும் தப்பாமல் இடம்பெறும்.

மிக கொஞ்சம் பேசி மிகக் கொஞ்சம் எழுதி மிக நிறைய சாதித்தவர் இவர். அவை புனைவாக இருக்கட்டும். இவரைப் போன்றே இவரது எழுத்துக்களும் அடக்கமானவை / அமைதியானவை; ஆனால் ஆழமானவை.

முதல் பதிப்பு : 2008

வெளியீடு : காவ்யாமுன்றில்

முன்றில் 1988 முதல் 1996 வரை 19 இதழ்களாக வெளிவந்து சிற்றிதழ் வரலாற்றில் சிறந்த இடத்தையும், நவீன தமிழிலக்கிய ஆக்கங்களுக்குச் சீரிய தளத்தையும் தந்து தமிழ் முற்றமாக விளங்கியது. இதற்கு தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளான அரங்கநாதன், அசோகமித்திரன், க.நா.சு. ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இந்நூலின் ‘முன்றில்’ இதழ்களில் வெளிவந்த கவிதை, கதை, கட்டுரை, நேர்காணல், தலையங்கம் போன்றவை முறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

முதல் பதிப்பு : 2010

வெளியீடு : காவ்யா

முத்துக்கள் பத்து

நல்ல படைப்பாளிகளும் இருட்டடிப்பும் ஒட்டிப்பிறந்த ரெட்டைக் குழந்தைகள் போல வாழும் தமிழுலகில் மா. அரங்கநாதன் படைப்புகள் மீது படைப்பாளிகள் மற்றும் படிப்பாளிகள் போதிய கவனம் கொள்ளாததில் வியப்பில்லைதான். தோற்றத்தால் குரலால் அமைதியால் ஈர்த்தவர், இப்போது கருத்தால் ஈர்க்கத் துவங்கினார். முதலில் என்னை அசர அடித்தவை அவரது பாத்திரங்கள். அவரின் கதை உலகில் எவருமே கெட்டவர்கள் இல்லை. அப்படி முடியுமா என்ன? உங்கள் பார்வையை மாற்றினால் சாத்தியம் என்கிறார் அரங்கநாதன். பாத்திரங்களும் அவற்றின் சிக்கல்களும் அவைகளின் மனஓட்டங்களும் ஏதோ ஒரு மாயவலை நெய்தாற்போல் அடிக்கடி அகக்கண்ணில் விரிந்தபடி இருந்தது, அந்த மரபின் நீட்சியில் வந்த நெசவுக்காரனாகவே ஆகிப் போயிருக்கிறார் இப்படைப்பாளி.

முதல் பதிப்பு : 2010

வெளியீடு : அமுர்தா பதிப்பகம்

 

முத்துக்கறுப்பன் எண்பது

மா.அரங்கநாதனின் அனைத்துக் கதைகளிலும் முத்துக்கறுப்பன் ஊடாடுவான். அவன் பெயரில் ஒரு டீக்கடையாவது இருக்கும். அல்லது அவன் பெயரில் கள்ள ஓட்டாவது போட்டு விடுகிறார்கள். முத்துக் கறுப்பனா முத்துக் கருப்பனா என்பது கூட ஒரு பிரச்சனைதான். மா. அரங்கநாதனது எழுத்து சிறப்பே - இப்படி ஒரு பாத்திரம் - தப்பு, பல பாத்திரங்கள் ஒரே பெயரில் வந்து போவது வித்தியாசமான முயற்சி. நானும் என் படைப்புகளில் 'ஆறுமுகங்களை' படைப்பதற்கு இவரே உந்து சக்தி. இது தமிழ்வாணனின் சங்கர்லால் போலவோ சுஜாதாவின் கணேஷ்வசந்த் போலவோ அல்ல. இவர் கதைகளில் இவர்தான் முத்துக் கறுப்பனா என்று பல இடங்களில் எண்ணத் தோன்றும்.

முதல் பதிப்பு : 2011
வெளியீடு : காவ்யா

 

 


மா. அரங்கநாதன்
எழுத்துக் கலையும் அதன் மேதமையும்

மா.அரங்கநாதனின் எழுத்துக் கலை மிகவும் வித்தியாசமானது. பொதுவாக தமிழ் மரபில் உள்ள சமயத்தை மையமிட்டு சுமார் 50 ஆண்டுகள் எடுத்து வளர்ந்தது இது. தமிழர்கள் இவருடைய கலையை முழுமையாய் அறிந்து கொண்டார்களா என்றால் இல்லை. இவருடைய கலை ஓரளவு பாரதியிலிருந்தும் ஓரளவு பாரதிதாசனிடமிருந்தும் உரத்தை எடுத்துக் கொண்டது. எல்லா முழுமை பெற்ற கலையிலும் தவிர்க்க இயலாத தன்மையும் அகில உலகத் தன்மையும் எதிர்காலத் தன்மையும் உண்டு. இவருடையதிலும் இவை உண்டு. தமிழ்ச்சூழல் சரியில்லை. இப்படிப்பட்ட மேதமை கொண்ட ஒருவரை போதிய அளவு கொண்டாடவில்லை. அதற்கு அறியாமைதான் காரணம். எண்பது வயதாகும் இந்த எழுத்துக் கலைஞர் இன்று வாழும் எந்த எழுத்துக் கலைஞரை விடவும் உயர்ந்த அழகியல் வீச்சுக் கொண்டவர். இந்த நூலில் பல கோணத்திலிருந்து அரிய எழுத்தாளர்கள் மா. அரங்கநாதன் படைப்புகள் பற்றி எழுதியுள்ளார்கள்.

ஜூலை-செப்டம்பர் 2013 இதழ் இணைப்பு

 

 


இன்மை-அனுபூதி-இலக்கியம் தொன்மை-நவீனம்-படைப்பு-மொழி-சித்தாந்தம்
மா.அரங்கநாதன்
நேர்காணல் - எஸ்.சண்முகம்

இவருடைய கதைகளை மட்டும் படித்தால் , சண்முகம் இந்நூலில் கேள்விகள் மூலம் கண்டுபிடித்து வெளிக்கொணரும் மா. அரங்கநாதன் கிடைக்க மாட்டார். அந்த வகையில் இந்த நேர்காணல்தான் மா.அரங்கநாதனின் கருத்துலகத்தின் ஆழத்தன்மையை முதன்முதலில் வெளிப்படுத்துகிறது.

முதல் பதிப்பு : 2012
வெளியீடு : புது எழுத்து

 

 

முதல் பதிப்பு - நவம்பர் 1987
வேள் பதிப்பகம்
 
புகைப்படங்கள்
ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...

மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved