Girl in a jacket

 

ஊரின் மேற்குப்புறமாக இருக்கும் அம்பலத்தின் பின்பக்கம் இரவில் சென்று பார்த்தால், வயல் வெளிகளைக் கடந்து தூரத்தில் மின் விளக்கு எரிவதைக் காணலாம். அதைப்பார்க்க, கூடி நிற்ப்போம். மோட்டார் வண்டி சாலையில் ஓடுவதைக்காண நான்கு மைல் நடக்கவேண்டும்.

செல்பேசிகளும், கணினிகளும் நிறைந்து ஐந்நூறு ஆண்டுகளில் காணவேண்டிய மாற்றம் ஒரு ஐம்பது ஆண்டுகளில் நம்மிடையே வந்து சேர்ந்ததை என்ன சொல்ல? நினைத்துப்பார்த்தால் வருவது வேதனையா - வியப்பா - மகிழ்ச்சியா - என் பெற்றோர் காலத்திற்கும் என் காலத்திற்கும் இந்த மாற்றம்போல, என் பிள்ளைகள் காலத்திற்கு இல்லையே - திடீரென எங்கிருந்தோ வந்து குதித்தாற்போல.

பள்ளியில் படிக்கும்போது கல்கண்டில் கதையொன்று கோபுவின் கதை என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். தமிழ்வாணன் மணியார்டர் கூப்பனில் தம்பி என்று வாழ்த்தி இரண்டு ரூபாய் அனுப்பியிருந்தார். தமிழாசிரியர் பிச்சைக்கண்ணு அடவியார் அதைக்கேட்டு புன்னகை புரிந்தார். ஆனால் கணித ஆசிரியர் முத்தையா அவர்கள் சிறிது கூட மாற்றமில்லாது, “போதுமே வேறென்ன வேண்டும்” என்று நிறுத்திக்கொண்டார். அவரைக்குற்றஞ்சொல்ல முடியாது. எனது கணித ஞானம். பள்ளிப்படிப்பு சீராக அமையாததற்கு இந்தக்கணக்கு ஒரு காரணம். பெற்றோர் எழுத படிக்கத் தெரிந்தவர்களாகவும் சில குறள் – கம்பராமாயணச்செய்யுட்களை தெரிந்தும் வைத்திருந்தனர். அக்கால கட்த்தில் வேண்டிய உதவி பெற்றது நூல் நிலையங்களில் இருந்துதான். எங்கள் கிராம நூல் நிலையத்தில் நல்ல நூல்கள் இருந்ததோடு கவிமணி தேசிகவிநாயகம் அவர்கள் இல்லத்திலிருந்து கலைமகள் – சக்தி இதழ்கள் ஆரம்பகால கட்த்திலிருந்தே பெறப்பட்டு பைண்ட் செய்யப்பட்டு இருந்த படியால், புதுமைப்பித்தன், லா.ச.ரா போன்றோரின் ஆரம்ப கால எழுத்துகளையும் படிக்க முடிந்தது.

‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’,’ அன்று இரவு’ போன்ற கதைகளை அப்போது வெளிவந்த கலைமகளில் படிக்க முடிந்தென்றால், ‘மகா மசானம்’, ‘சித்தி’, ‘செல்லம்மாள்’ போன்வற்றை பழைய கலைமகள் இதழ்களில் தேடிப்பிடித்து படிக்க முடிந்தது. சக்தி இதழ்களில் அதே போல் லா. ச. ரா எழுதிய “ கறைப்பட்ட இலை, ‘சோமசன்மா’, ‘சப்தவேதி’ போன்ற கதைகளை படிக்கமுடியும். புதுமைப்பித்தன் சக்தியில் எழுதவில்லை. ஆனால் காலமான போது “இருட்டு” என்ற கவிதையை அந்த மாதம் வெளிவந்த சக்தி இதழில் படித்தோம். வார மாத பத்திரிகைகள் எவையெல்லாம் தமிழிலே உண்டோ அத்தனையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தபடியால் ஓரளவு நல்ல எழுத்து பற்றி ஒரு கவனம் ஏற்பட்டது. பதினெட்டாம் வயதில் முதற்கதை பிரசண்ட விகடனில் வெளியாயிற்று. அடுத்த சில மாதங்களில் வேலை கிடைத்தது. நெல்லை வந்து ரயிலை முதன் முதல் பார்த்து அதில் பிரயாணம் செய்தது, சென்னை பயணத்தின் போதுதான்.

நம்பி என்னும் அழகிய நம்பி என்னும் கிருஷ்ணன் நம்பியுடைய நட்பு ஐந்தாம் வகுப்பில் சேர கிராமத்திலிருந்து சென்றபோதுதான். அது Prepatory Class என்றழைக்கப்பட்டது. பள்ளியின் பக்கம் தான் அவன் வீடு. அவன் தங்கையும் அதே பள்ளியில் இரண்டாவதோ, மூன்றாவதோ படித்தாள். எங்கள் பள்ளியில் காலை அரைமணி நேரம் திருக்குறள் வகுப்பு. பிறகுதான் மற்ற பாடங்கள். குறளுக்கென்று ஒரு தேர்வும் உண்டு. அது ஒரு விசேடம் – பெருமைப்பட வேண்டிய விஷயம். நாங்கள் ஐந்து ஆண்டுகள் சேர்ந்து படித்தோம். பள்ளி இல்லாத நாள்களிலும் சந்திப்பு நடக்கும். ஒரு தடவை அவன் வீட்டீற்கு சென்ற சமயம், அவன் தகப்பனார் திரு. கிருஷ்ண ஐயர் அவர்கள் எனது வயதைக் கேட்டார். சொன்னதும் “நீ நம்பியை விட இரண்டு மாதம் பெரியவன்” என்றார். அவர் பின்னால் நின்று அதைக்கேட்டுக்கொண்டே முகத்தை சுளித்து அழகு காட்டினான். அந்த அழகிய நம்பி.

‘மகுடபதி’, ‘பார்த்திபன் கனவு’, ‘கோமதியின் காதலன்’, ‘துப்பறியும் சாம்பு’ போன்றவைப்பற்றிதான் ஆரம்ப காலப்பேச்சு இருக்கும். அவனுக்கு எஸ்.வி.வி. நாடோடி போன்றோர் எழுத்து பிடிக்கும். அவன் உறவினர் பி.ஸ்ரீ. அவர்கள் ஆனந்த விகடனில் இருந்த சமயம். கிட்டத்தட்ட எல்லா எழுத்தாளர்கள் பற்றியும் உற்சாகமாக பேசுவான். அவர்களது படைப்புகள் பற்றி மட்டுமல்லாது அவர்களை நேரில் தெரிந்தவன் போல் பேச்சு இருக்கும். கலைமகளில் வந்த கொனஷ்டையின் நாடகம் பற்றிப் பேச ஆரம்பித்தால் அவர் குமுதினியின் உறவினர் என்ற விவரம் தருவான். எல்லார்வி என்ற எழுத்தாளர் தூசு என்ற கதையைப் பிரசுரிக்க அலைகிறார் என்று கூறுவான். அவையெல்லாம் கேட்பதற்கு நன்றாகவும் எளிமையாகவும் தான் இருந்தன. மாயாவியின் கதைகள் அபாரம் என்பான். பிற்காலத்தில் எழுத்தாளர்களுடன் நெருங்கிப் பழகினான். அதுபற்றி நிறையவே பேசினான்.

பள்ளிப்படிப்பு முடிந்து, ஓராண்டு தகப்னார் உரக்கடையை பார்த்துக் கொண்டிருந்தவன், திடீரென ஒருநாள் “நான் நாளைக்கு காலேஜ் போகப் போகிறேன்” என்று சந்தோமில்லாமல் தெரிவித்த்தான். அப்போது எங்கள் சந்திப்பு அதிகமாகவே இருந்து. சென்னை செல்லும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கலைமகளுக்கு அனுப்பிய கதை திரும்பி வந்துவிட்டது. அதை பிரசண்ட விகடனுக்கு அனுப்பி வைத்தேன்.

1952ஆம் ஆண்டு ஏப்ரல் மாத வெயிலில் நான் நெல்லை வந்து ரயிலில் ஏறி மறுநாள் காலை சென்னை வந்தேன்.

வேலை கிடைக்க அத்தனை கஷ்டப்படவில்லை. அப்போது அரசு அலுவலகங்களில் வேலை நேரம் காலை பதினொரு மணி முதல் மாலை ஐந்துவரை. படிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்து. கன்னிமாரா நூல் நிலைய பழக்கம் உடனடியாகவே ஏற்பட்டு விட்டது. ஊரில் மாட்டு வண்டி தவி எதிலும் அதிகிமாக பயணம் செய்தறியாத நான் இரண்டொரு நாள்களிலேயே ரயிலில் வந் து அடுத்து ட்ராம் வண்டியில் வேலைக்குப் போகிறேன். பத்துமைல் நடந்து ஒரு ஆங்கிலப்படம் மாதந்தோறும் பார்த்த எனக்கு, கணக்கற்ற மேநாட்டுப் படங்கள் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்து.

இரண்டாவது கதை பிரசண்ட விகடனில் வந்து. புதுமை என் மாதப்பத்திரிகையில் ஒரு கதை இது பின்னர் ஞானக் கூத்து கதைக் தொகுதியில் சேர்க்கப்பட்டது. திரு எம்.எஸ். ராமசாமி அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு மஸ்தே ஆங்கில இதழில் தொண்ணூறுகளில் வந்து. பொன்னி கலைமன்றம் ஆகிய இதழ்களிலும் எழுதினேன்.

நா.சு.ராமசாமி என்று அப்போது அறியப்பட்ட சுந்தர் ராமசாமி அவர்களை நான் சென்னை வருவதற்கு நாலைந்து மாதங்களுக்கு முன்னரே சந்தித்தேன். ஜனதா புத்தகநிலையம் என்றொரு கடை திறக்கப்பட்டிருந்த்து. அங்கே புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, வந்தவர், தான் புதுமைப்பித்தன் நினைவுமலர் ஒன்று கொண்டிருந்தார். புதுமைப்பித்தன் என்ற வார்த்தை காதில் விழுந்த்தால் நானும் அவர்கள் பேச்சில் கலந்து கொண்டேன். நினைவு மலர் ஒன்றை இந்த நாகர்கோவில் நகரில் தயாரிக்க முன்வருபவர் எவ்வளவு பெரிய ஆளாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் தான் முதலில் எழுந்து. மலரில் புதுமைபித்தன் கதை எதையாவது போடுவீர்களா என்று கேட்டேன். “ஏதாவது அவரது கதையைப் படித்ததுண்டா” என்பது அவர் கேள்வி. நான் செல்லம்பாள் / சித்தி படித்திருக்கிறேன் என்றேன். அதைத் தான் இன்னும் படிக்கவில்லை என்றார் வியப்புடன். பிறகு மகாமசானம் பெயரைச் சொன்னேன். அதையும் படிக்கவில்லை என்றார். இப்போது நான் வியப்படைந்தேன். சென்னை வரும்வரை அந்த மலர் வெளிவரவில்லை. ஒருநாலைந்து முறைதான் சந்தித்திருப்பேன். பேசியதிலிருந்து இதுவரை வடதிருவிதாங்கூரின் வைக்கம் ஆலப்புழை பகுதியில் தான் அவர் வளர்ந்தவர் என்பதும் மலையாளமே படித்து எல்லாம் என்று தெரிந்து கொண்டேன். நம்பியிட நா.சு.ராசாமியைப் பற்றி தெரிவித்த போது அவன் தெரியும் என்றான்.

“எங்க பக்கத்து வீட்டிலே உள்ள பிள்ளைக எல்லாம் நம்ம பள்ளிக் கூடத்திலே தான் படிச்சவா. என் தங்கை கூடவே பள்ளிக்கு வரும். அவர்களெல்லாம் சுதர்சன் ஜவுளிக்கடை முதலாளியுடைய சொந்தம். எனக்குத் தெரியும் நீ ஒண்ணும் சொல் வேண்டாம்” என்று கூறிவிட்டான். ஏற்கனவே அவனுக்குத் தெரிந்த குடும்பம்.

நானும் நம்பியும் வெகுவாக வாக்குவாதம் செய்பவர்கள்தாம். என்றாலும் ஒருவர் உணர்வை மதிக்காமல் இருந்த்தில்லை. சண்டையும் இலக்கியம் பற்றியதாகவே இருக்கும்.

நம்பியின் கடை எதிரே சமயப் பிரசாரம் நடக்கும் ஓர் இடம். அங்கே ஆதீனகர்த்தாக்கள் முதல் சுத்தானந்த பாரதி வரை உரைகள் நிகழ்த்தியிருக்கிறார்கள். அதில் பணியாற்றும் திரவடியா பிள்ளை என்பவர் ஒரு நாள், கடைக்கு வந்து நீங்க சண்டை போடறது அங்க வரைக்கும் கேக்குது எத்தனை தடவைதான் ஒரு நாளைக்கு சண்டை என்று கேட்க நம்பி சொல்கிறான் “ஒரு நாளைக்கு எத்தனை என்றா கேக்கறீர் 60 நிமிஷத்திலே 30 சண்டை”

“அப்படின்னா மீதி 30 நிமிஷம்”

“மூச்சு விட வேண்டாமா இருந்தாலும ஒங்களுக்கு ரொம்ப ஆசை”

இதை அந்த திருவடியா பிள்ளை ஞாபகம் வைத்திருந்து ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த போது என்னிடம் ருசிகமாக அதை ஞாபகப்படுத்திக் கொண்டார்.

நா.சு.இராமசாமி நமது கதையின் கையெழுத்துப் பிரயை ஒரு தடவை படிக்கும்படி தந்தார். அப்போதே பூங்காவில் படித்துச் சொல்லிவிட்டேன். நல்ல கதைதான். அது பெயர்மாற்றத்துடன் பின்னர் வந்தது.

புதுமைப்பித்தன் நினைவுமரை, சென்னையில், இங்கே வந்து இரண்டு மாதங்கழித்து ஒரு புத்தக் கடையில் பார்த்தேன். அதில் ஜனதா புத்தக நிலைய விளம்பரம் வந்திருந்தாக ஞாபகம். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே நான் ஊர் சென்றேன். நம்பியை மட்டுமே சந்தித்தேன். நா.சு.ரா. அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தெவித்தான். இரண்டு நாட்களில் திரும்பி விட்டேன். அப்போது நம்பியின் கதைகள் எதுவும் பத்திரிகைகளில் வந்திருந்தாகத் தெரியவில்லை.

அலுவலக வேலைகள் எனக்கு பிடித்திருந்தன. கணக்குத் துறையில் என்னை இருந்த வேண்டாம் என் உரியவர்களிடம் கேட்டுக் கொண்டேன்.

ஒருநாள் நம்பி ஒரு கடித்துடன் சாந்தி பத்திரிகையை அனுப்பியிருந்தான். நா.சு.ராவின் தை சுந்தர ராமசாமி என் பெயருடன் வெளியாகியிருந்த்து, புகைப்படத்துடன். அதை பற்றி உன் கருத்தை எழுத என்றும் கேட்டிருந்தான்.

இக்கால இடைவேளியில் நம்பி, சு. ராவிட நன்கு பழகியிருந்தான்.

சாந்தியில் வெளிவந்த சு.ரா.வின் கதை பற்றி என்னை எழுதச் சொல்லியிருந்தபடியால் நான் எழுதியிருந்தேன். கதை நன்றாகவே வந்திருக்கிறது என்பதற்கான விவரங்களை சொல்லிவிட்டு, வாய்தவறி சொல்லிவிட்டாற் போன்றதோர் வாக்கியமும் உண்டு என்று அநதக் கதை பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதற்கு சு.ரா.விடமிருந்து தவறை உணர்ந்து கொண்டேன் என்றோரு அஞ்சலட்டை வந்து. எனக்கு அவரிடமிருந்து வந்த ஒரு கடிதம் அதுதான். நம்பியின் கதைகளிலும் இப்படிப்பட்ட வாக்கியங்கள் நிறைய வரும். அதனால் மதிப்பு ஒன்று குன்றிவிடாது. புதுமைப்பித்தன் தையில் வந்த முரண் பற்றி அவரே கூறியிருக்கிறார். கதையின் ஆரம்பத்தில் காலமாகிவிட்டதாகச் சொன்ன ஒருவர் கதையின் கடைசியில் கதவின் பின் நின்று கொண்டிருப்பதாத எழுதிவிட்டதாகவும் பின்னர் அது தெரியவந்தும் இது மாதிரி இறந்தவரைப் பிழைக்க வைக்கும் காரியங்களைப் பண்ணுவதில்லை என வாக்குறுதி அளித்தேன் என்று வையுங்கள் என்று எழுதியிருக்கிறார். இவ்வாறு தனது தவறைச் சுட்டிக்காட்டியிருப்பதைக் காணும் போது இது போல் பல தவறுகள் செய்து பல விளக்ங்கள் அளிக்கமாட்டாரா என்று தோன்றும். ஆனால் நம்பி கோபப்படுவான் என்னிடம் மட்டுந்தான். கடைகிமுறை அவன் சென்னை வந்திருந்த போதுகூறியுள்ளான்.

உன்னிடம் மட்டுமே என்னால் சுதந்திரமாக பேச முடிகிறது

அடுத்த தடவை ஊர் சென்ற போது சு.ரா. அவர்களைச் சந்தித்தேன். அவரது டையில். காரில் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இரண்டு பெண் குழந்தைகள் அப்போது. மூத்தவளுக்கு ஆறு வயதிருக்கும். சௌந்தரம் என்று பெயர் சொன்னாள். பாட்டனார் பெயரை பேரனுக்கும் பேர்த்திக்கும் சூட்டுவது நாஞ்சில் நாட்டு வழக்கு. பேரை உடையன் பேரன் என்ற சொலவடை அங்கே உண்டு. அதைப்பற்றி பேசினோம் என்று ஞாபகம்.

அவரைச் சந்தித்து அதுவே கடைசி முறை.

உறவினர்கள் எனக்கு பொருளாதாரச் சிக்கல் ஏற்பட காரணமாக இருந்தார்கள். அவற்றிலிருந்து மீள பத்தாண்டுகள் ஆயிற்று.

அழகிய நம்பி காலமானதெல்லாம், எங்களோடு படித்து அரபு நாட்டில் வேலை பார்த்து வந்த தர்மராஜன் என் நண்பர் மூலமாகவே அறிந்தேன். அதன் பின்னர் நான் ஊர் செல்லவில்லை. நம்பியின் கதைகள் தங்க ஒரு போன்ற ஒரு சில தவிர மற்றவை பெயரெடுக்கவில்லை. த்தை எழுதுவதில் பொதுவாக சலிப்புற்ற வனாகவே இருந்தான். கவிதைகள் சில பலகாலம் பேர் சொல்லும். சுந்தர ராமசாயின் நாவல்கள் கவிதைகள் கட்டுரைகள் ஆகியவற்றை விட சிறுகதைகள் சிறந்தவை.

சென்னையில் க.நா.சு. அவர்களைச் சந்தித்து கடைசிக் காலத்தில்தான். அப்படியும் எனது "வீடு பேறு" கதைத் தொகுதி பற்றி விரிவான சொற்பொழிபு ஆற்றி எழுதவும் செய்தார். நான் சந்திக்காமலிருந்த போது கூட எனது புத்தகங்களுக்கு முன்னுரையும் விமர்சனமும் நகுலன் அவர்கள் எழுதியுள்ளார்.

ஒய். எம்.ஸி.ஏ. பட்டிமன்ற செயலாளர் திரு. பக்தவத்சலம் அவர்கள் அளித்த உற்சாகத்தால் சில கட்டுரைகளை எழுதி அந்த அவையிலே படித்தேன். அந்த கட்டுரைகளையே 'பொருளின் பொருள் கவிதை' என்ற நூல் வடிவத்தில் கொண்டு வந்தோம். அது வெளிவந்த சமயம் எனக்கு இலக்கிய உலகில் க.நாசு., நகுலன், அசோகமித்திரன், ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, ஆத்மநாம் ஆகியோர் யாரையும் தெரியாது. ஒரு பத்து நாள்களுக்கு முன் அறிந்த ஓர் எழுத்தாளன் எழுதிய நாலுக்கு அவர்கள் எல்லாரும் எழுத்தாளனுக்காக அல்லாமல் அவன் புத்தகத்திற்காக வந்து அதை விமர்சித்த்து என்னால் மறக்க முடியாதவொன்று. கலைஞன் மாசிலாமணி, காவ்யா சண்மகசுந்தரம் அளித்த உற்சாக வாழ்நாள் முழுவதும் வரும், எனது எழுத்துக்கள் குறித்து பேசியும் எழுதியும் உள்ள தமிழவன், ப. கிருஷ்ணசாமி, பொன்னீலன், பிரபஞ்சன், பாவண்ணன், எஸ். ராமகிருஷ்ணன், பழநியப்பா சுப்ரமணியம், நஞ்சுண்டன், க. பஞ்சாங்கம், கோவை ஞானி, பா. விசாலம், கே. விட்டல், லதா ராமகிருஷ்ணன், அமரந்தா ஆகியோக்கு நன்றி சொல்லவேண்டும். சிறந்த கவிஞர் பிரமிள் மறக்கப்பட முடியாதவர். மூத்தவர்களான வல்லிக்கண்ணன், தி.க.சி இளையவர்களான திருப்பூர் கிருஷ்ணன், ரவி சுப்ரமணியன், தேனுகா, ப.தி.அரசு, பங்சாட்சரம் செல்வராசன், வசந்த் செந்தில், அண்ணா கண்ணன் எஸ். சண்முகம் அளித்த உற்சாகம், இன்னும் நான் கண்டோ கேட்டோ அறியாத பல இலக்கிய அன்பர்களின் எழுத்து. பேச்சுயாகவும் நன்றிக்குரியவை ஆகின்றன.

என் சம்பந்தி திரு.வ. சிதம்பர தாணு, என் மகன் மகாதேவன் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர்.

கிருஷ்ணன் நம்பியின் தம்பி வெங்கடாசலம் சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னை சந்தித்து, நம்பியின் நினைவு மலர் ஒன்று வெளியிட இருப்பதாகவும் அதற்கு கட்டுரை ஒன்று தரவேண்டும் என்று கேட்டு கொண்டார். அப்போது என் மகன் திருமண சம்பந்தமான அலுவல்கள் காரணமாக இயலாது போயிற்று. வெங்கடாசலம் நல்ல எழுத்து வன்மை உடையவர் என்று அமுதசுரபியில் வந்த அவர் கட்டுரையில் தெரிந்து கொள்ள முடிந்தது.

இக்கதைகள் தமிழரசு இலக்கிய மலர், தீராநதி, அமுதசுரபி, விருட்சம், விகடன், சண்டே இந்தியன் இதழ்களில் வந்தவை. அவ்வாசிரியர்கட்கு நன்றி.

சிராப்பள்ளி என்ற கதை, சன் டி.வி.சார்ந்த திரு சண்முகம் அவர்கள் என்னிடம் கூறிய ஒரு நிகழ்ச்சியின் பின்னணியில் உருப்பெற்றது.




 
புகைப்படங்கள்




ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved