சிதம்பர ரகசியத்தன்மை
- லதா ராமகிருஷ்ணன். அனாயசமான எழுத்து
இலக்கியத்திற்கு ஒரு ’முன்றில்’
ஞானக்கூத்து - மா.அரங்கநாதன்அந்த பழைய புத்தக கடை பெண்கள் பள்ளிக்கும் காய்கறி மார்கெட்டுக்கும் பின்புறம் இருந்தது. காய்கறிகளின் அழுகின வாடை. சுவருக்கு அந்தப்பக்கம் பள்ளிப் பெண்களின் மனன கோஷம். புத்தக கடையை வெளியிருந்து பார்ப்பவர் காயலான் கடை என்று சொல்லத்தகுந்த தோற்றம். அந்த வழியாக நடந்து கடக்கும்போது உள்ளே நுழைந்து பார்க்க தோன்றியது. குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் பெயர் சொல்லி அவர்கள் எழுதிய புத்தகம் எதாவது இருக்குமா என்று கேட்டேன். அவரோ யார் எழுதினது என்ற விவரமெல்லாம் தெரியாதுங்க. ஆனால் எதோ சிலது இருக்கும் நீங்களே தேடி பாருங்க, கிடைச்சு பிடிச்சிருந்தா எடுத்துகிட்டு போங்க என்றார்.
தில்லை அம்பலத்தானும் பிஸிக்ஸ்தியரியும் குரளைப்பேய்களும் மற்றும் முத்துக்கருப்பனும்.... - ருத்ரய்யா
தமிழில் வந்துள்ள பெரும்பாலான படைப்புகள் தமிழ் சினிமாக்களைப் போன்றே மொக்கையானவை. அப்படிப்பட்ட சூழலில், சினிமாக்காரனான என்னை போய், “அரங்கநாதன் படைப்புகளைப் பற்றி என்னிடம் சொன்னதை ஒரு கட்டுரையாக எழுதுங்களேன்” – என்று நண்பர் ரவிசுப்ரமணியன் சொன்னபோது, எனக்கு கூச்சமே ஏற்பட்டது. இதே மாதிரியான ஒரு கூச்சத்தை நான் அரங்கநாதனிடமும் கண்டேன். அதுதான் அவரை ஒதுங்கியிருக்கும் படி செய்திருக்க வேண்டும். ஒதுக்கியதே இன்னோரு கோணத்தில் அவரை ஆக்கியதும் என்றெனக்கு புரிந்தது. நாணயத்துக்கு இருபக்கங்கள் இயல்புதானே. ஆனாலும் சில நாணயங்கள் மதிப்பிருந்தும் லௌகீக அர்த்தத்தில் செல்லுபடியாவதில்லை. அதற்காக அது காலாவதி ஆனதென்று அர்த்தமில்லை. காலத்தை முந்திக்கொண்டு புழக்கத்துக்கு வந்த நாணயம் அது. காலத்துக்கு முந்தும்போது அருகில் யாருமின்றி காணாமல் போவது சகஜமாக நடக்க்கூடியதுதான்-இல்லையா. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது எழுத்துலகத்திற்கும் பொருந்தும். இந்நாளில், பாவப்பட்ட ஊமைபிள்ளைகள் என்ன செய்ய முடியும். நல்ல படைப்பாளிகளும் இருட்டடிப்பும் ஒட்டிப்பிறந்தரெட்டை போல வாழும் தமிழுலகில் மா.அரங்கநாதன் போதிய கவனம் கொள்ளப்படாததில் எனக்கொன்றும் வியப்பில்லைதான். மா. அரங்கநாதன் என்ற பெயரே எனக்கு அறிமுகமானது மிக சமீபத்தில்தான்.
|