Girl in a jacket

ஒன்றிற்கு மேற்பட்ட பெரிய இனங்கள் ஒரே காலத்தில் முழுமையாக இருந்திருக்கின்றன என்பதில் ஆய்வாளருக்கு ஐயமில்லை.

ஒரே மாதிரியான ஐரோப்பிய மொழிகளைத் தோற்றுவித்த ஒரு குறிப்பிட்ட ஆதிமொழியின் பல்வேறு அம்சங்களை சமஸ்கிருத மொழியிலும் காண்கின்றனர் ஆய்வாளர்கள். சில வட இந்திய மொழிகளும் பாரசீக மொழியும் ஐரோப்பிய மொழியின் அம்சங்களைக் கொண்டு நிற்பதையும் காண்கின்றனர். இவ்வகைப்பட்டது இந்தோ-ஐரோப்பியக் குழுவை சார்ந்தனவாகும். பாரசீகத்தையும் இந்தியாவையும் வெற்றி கொண்டவர்கள், அந்நாட்டு பூர்வகுடி மக்கள் அடிமையாக்கப்பட்டதும், அவர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று பிரகடனம் செய்து, அந்தப் பொருளில் "ஆரியர்" என்று அழைத்துக் கொண்டார்களாம். வடக்கு என்று பொருள்படும் "நார்டு" என்ற ஜெர்மன் சொல்லடியாகப் பிறந்தது இச்சொல்.

இங்கே இருந்து கொண்டிருப்பதெல்லாம் எப்போதுமே வர்ணாசிரம தர்மம்தான் என்று எல்லாரையும் மூக்கறையான் கதைக்கு ஆட்படுத்த நினைப்பது பிராமணர்களின் ஒருவகை தாழ்வு மனப்பான்மை ஆகும். இந்தோ - ஆரிய குழுவில் இவர்களால் பூரணமாக இடம்பெற முடியாத காரணத்தாலுமிருக்கும்.

நந்திவர்மன் மனைவியரில் ஒருத்தி கதம்ப குல பார்ப்பனப் பெண். மகத நாட்டிலிருந்து குடியேறியவருக்காக ஏற்படுத்தப்பட்டது பார்ப்பனச்சேரி. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன்பே தோன்றிய அவ்வூர் கோவில்களில் அறிவர், ஆதிசைவர் பூசனை செய்து வந்ததும் பின்னர் அந்தப் பொறுப்பை பார்ப்பனரிடம் விட்டதும் தெரியவருகிறது. அறிவர் என்பவர் சித்தர் குணம் கொண்டோர். ஆதிசைவர் ஆரியர் அல்லர். பார்ப்பு என்ற்ல் இளையது - குஞ்சு என்று பொருள். பின்னால் பொறுப்பேற்றுக் கொண்ட பார்ப்பனருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது நியாயம். இன்றுங்கூட கேரளாவில் மேல் சாந்தி - கீழ் சாந்தி Senior. Junior என்ற வகை உண்டு. சம்பந்தர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர் சோமாசிமாற நாயனாரைப் போன்ற பார்ப்பனர் அல்லர். அவர்கள் ஆதி சைவரே. இம்மூவர் பெயரையும் பார்ப்பனர் சோழர் காலத்தில், பார்ப்பனர் தம் குலத்தினருக்கு மட்டும் கல்வி அறிவூட்ட அரசர் தயவு இருந்தது. சர்வ மானியம், கோசகஸ்ரம், இரண்ய கர்ப்பம் போன்ற பரிசுகள் அரசன் தந்தாக வேண்டுமென்ற நிர்ப்பந்தங்கள் விதிமுறைகளாயின. வட புலத்திற்கென ஏற்பட்டிருந்த விதிமுறைகளும் அதில் இடம்பெற்றன.

இவ்வகை விதிகளை வடக்கிலிருந்து இறக்குமதி செய்த பார்ப்பனர் அக்காலத்திலும் சரி, இப்போதும் சரி, வட புலத்தவரைவிட தாழ்ந்தவராகவே மதிக்கப்பட்டனர். பின்னர் மச்ச புராணத்தில், ஒரிசா, ஆந்திரா, பஞ்சாப், த்ரவிட், கொங்கணம் முதலிய நாடுகள் தூய்மையற்றவை எனவும், அந்நாடுகளில் உள்ளர்களோடு கலந்து விட்டமையால், அங்குள்ள பிராமணர் இழிவுற்றனர் என்றும், அவர்களை சாவுச் சடங்குகளுக்கு அழைக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. தென்னிந்திய பிராமணரின் தாழ்வு மனப்பான்மைக்கு காரணம் இருக்கிறது.

ஸ்மிருதிகள், பிரம்மாணங்கள், புராணங்கள் யாவும் எல்லா வகையிலும் பிராமண இனத்தை மையமாக நிறுத்தி சொல்லப்பட்டதுதான்.

எல்லா இனங்களிலும் நல்ல சிந்தனையாளர் இருக்க முடியும். இயற்கை எந்த இனத்தையும் உயர்வாகவோ தாழ்வானதாகவோ படைக்கவில்லை. உருவ அமைப்பும் நிற வேற்றுமையும் தந்தது. மண்ணும், கால நிலையும், வைட்டமின்களும். கடவுள் என்ற மனித சிந்தனை எல்லா இனங்களுக்கும் சொந்தமானது. அது பிராமணரின் குலச்சொத்து அல்ல.

இந்த முறையில்தான் வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள முடியுமே தவிர, ஒரு இனத்தை வேண்டுமென்றே ஆதாரமில்லாது உயர்த்திப் பேசுவதும் தாழ்த்துவதும், யூகங்களின் அடிப்படையில் சாதிப்பதும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டம்தான். வட இந்தியாவில் ஆரியர்கள் தோன்றி அங்கிருந்து வட துருவம் சென்று, பின்னர் ஐரோப்பிய நாகரிகத்துக்கு வித்திட்டு, மீண்டும் இங்கே திரும்பிவிட்டனர் என்ற உத்தரப் பிரதேசப் பாட நாடகம் தேச பக்தியைக் காட்டலாம். உலகம் ஏற்காது. நார்வே - ஸ்லோவக் மக்களுக்கும் தேச பக்தி உண்டு. அந்த மக்களெல்லாம் நமது நாட்டு வரலாற்று ஆய்வை உத்தரப் பிரதேசக்காரரிடம் விட்டு விட்டு, கொலுப் பொம்மை வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

குற்றவாளிகளை எல்லாம் பள்ளமான இடத்திற்கு அனுப்பிவிட்டு அவர்களை "பள்ளர்" என்றழைத்தனர் என்று கதா காலட்சேப ஆராய்ச்சி நடத்தினால், அப்போது பிராமணக் குற்றவாளிகளை எங்கு அனுப்பினர் என்ற கேள்வி எழும்.

நல்லது. தமிழ் அல்லது த்ராவிட் இன வரலாற்றை எந்த இலக்கியத்திலிருந்து எடுத்துக் கொள்வது என்றால் இலக்கியத்திற்குள் மட்டும் அடங்குவதல்ல என்றுதான் சொல்ல வேண்டும். சொல்லப்போனால் உலகில் எந்த உயர்தனிச் செம்மொழிக்கும் அந்தக் குணம் உண்டு. சமஸ்கிருதத்திற்கு வரலாறு சொல்ல முடியும். ஒரு நார்டிக் ஆதி பாஷையைப் பேசி கொண்டு வந்த மக்கள் இன்னொரு பாஷையைப் பேசிய பூர்வகுடி மக்களோடு பேச வேண்டி வந்தபோது, இரு மொழிகளும் கலந்துண்டான ஒரு மொழி. எனவே அதற்கு ஒரு வகை புது வகையான பேச்சு மட்டும் இருந்திருக்கும். சமஸ்கிருதம் என்ற பின்னால் பெயர் பெற்ற அம்மொழி எழுத்தில்லாது ஒரு குறிப்பிட்ட வகை மக்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதற்காக, அதுவும் சில சமயம் தனிப்பட்ட முறையில் இரகசியமாகப் பேசிக் கொள்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட மொழி. காற்றிலே இருந்ததை மூக்கால் இழுத்து வெளியிட்ட ரிஷிகள் செய்த காரியம் இதுதான். எல்லாரும் செய்கிற காரியம்தான்.

குடும்பம் என்ற நிலை விவசாய நாகரிகத்தில் ஏற்படுவதற்கு முன்பே, மலைவாழ் மனிதனாக இருந்த போதே பேசப்பட்ட மொழியை “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து” என்று குறிப்பிட்டனர். மேலும் கல் என்பது மனித நாகரிகச் சின்னத்தின் ஆரம்ப நிலை. கல்லைத் துணையாகக் கொண்டுதான் வேட்டையாடி சாப்பிட்டான். கல்லைத் தரையில் ஊன்றி இறைச்சி உணவைப் பதப்படுத்தியிருக்கிறான். கல்லின் பக்கத்திலேயே உறங்கி, அதை தங்குமிடமாக ஆக்கியிருக்கலாம். அந்தக் கல்லின் மீது இன்னொரு கல்லெறிய, அங்கு தோன்றிய தீப்பொறி அவனை இன்னொரு நாகரிகத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறது. ஒருவேளை கல் உருண்டு சென்றதைக் கொண்டுதான் சக்கர நாகரிகம் வரத் தொடங்கியிருக்கும்.

கல்லை அவன் நேசித்திருக்க முடியும். அவனுக்குத் தெரிந்த, பிடித்தமான நிறமுள்ள மண்ணை அதன் மீது பூசியிருக்க முடியும். தனது அழகு நிலையை அவன் அதன் மூலம் வெளிப்படுத்தியிருப்பான்! இறந்து போனவர்களைப் புதைத்து, அந்த இடத்தில் நட்டு வைத்த கல்லை வணங்க ஒரு பயத்தோடு ஆரம்பித்திருக்கலாம். இன்றைக்கும் "கல் எடுத்து" என்ற சடங்கு தமிழ்நாட்டவர் எல்லாருக்கும் உண்டு. பிராமணர்களுக்கு இல்லை.

இப்படிப்பட்ட நிலையில், கடவுள் சிந்தனை தோன்றியுள்ள ஒரு இனத்தில் "வேத முதல்வன் - வேத நாயகன்" என்றெல்லாம் சொல்லி, கடவுளைச் சுட்ட வேண்டிய அவசியம் என்ன என்பதையும் பார்க்க வேண்டும்.

எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் முத்து கிருஷ்ணபிள்ளை என்பவர் கீர்த்தனை ஒன்று பாடியிருக்கிறார். "இனியொரு தாமதம் ஏன் என்துரையே," என்று அதிலே ஒரு வரி. நன்றாகவே இருக்கும். எந்தக் குற்றத்தையும் யாரும் சொல்லவில்லை. ஒரே ஒரு விஷயம். அதிலே அவர் "துரை" என்று குறிப்பிட்டது, வெள்ளைக் காரனையல்ல - செந்தில் முருகனை. அது எப்படி அந்த குறிஞ்சிவேள் திடீரென இங்லெண்ட் வாசியானான் என்று யாரும் கேட்கவில்லை-எல்லாருக்கும், படிப்பில்லாதாருக்கும் கூட அக்கால கட்டத்தில், அந்தச் சொல் ஓர் அர்த்தத்தைத் தந்திருந்தது. இன்றுங்கூட தந்து வருகிறது என்று சொல்ல முடியும். வெட்கமில்லாமல் நமது பெண்கள்கூட நமது குழந்தைகளைப் பற்றி அவ்வாறு குறிப்பிடுகின்றனர் "மாப்பிள்ளைப் பையன் துரை மாதிரி இருக்கிறான்", என்பதும் "பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு வெள்ளைக்காரக் குழந்தை தோற்றுப் போய்விடும்" என்று சொல்லிக் கொள்வது சாதாரணம். இதெல்லாம் எதனால் வந்தவினை? ஒரு வேளை நம்மை சீனாக்காரன் ஆண்டிருந்தால் என்ன சொல்லியிருப்போம்? ஓர் ஆப்ரிக்கன் ஆட்சியில் நாம் இருந்திருந்தால் எப்படி நடந்து கொண்டிருப்போம்?

மேலும் இந்த தமிழ் நிலத்திலேயே வேடர் கடவுளை வேள் என்று பிற்காலத்தில் அழைக்க முடியுமென்றால் "துரை" என்று சொல்வது எப்படி தவறாகும்? வரலாற்று உண்மைகளுக்குக் கெல்லாம் அப்பால் தோன்றுவதல்லவா அன்பு. எனவே அந்தந்த காலங்களில் தங்களுக்குத் தெரிந்த அளவில் பல்வேறு சமயங்களில் அரசு ஆணைக்கேற்ப - அரசனின் விருப்பத்திற்கேற்ப சொல்லயிருக்கிறார்கள். சொன்னதுதான் உண்மையே தவிர, அது வரலாறு சொல்லும் உண்மையல்ல. ஆவதற்கு எந்த வழியுமில்லை.

பழக்கத்தின் காரணமாகச் சொல்பவைகள் உண்டு என்பதையும் சொல்ல வேண்டும். "என்னப் பெத்த ராசா" என்று தாய் குழந்தையைக் கூறினால் அது தவறு என்று யாரே சொல்ல வல்லார்?

இதெல்லாம் சின்ன விஷயங்கள்தாம். ஆனால் ஆளைப் பொறுத்து விஷயங்கள் பெரிதாகி விடுகின்றன. வேதம் - வேதநாயகன் எல்லாம் அப்படிப்பட்டவைதாம்.

புதிதாகத் தோன்றிய இனமொன்று தனது இன மக்களை மட்டுமே பிறப்பு ரீதியாக அடையாளங்கண்டு, அரசர் ஆதரவு பெற்று, தெய்வ குற்றம் என்ற பயமுறுத்தலோடு வந்திருந்தால், வெள்ளைக்காரனுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? "ராஜத் துரோகம் கூடாது. வெள்ளைக்காரனுக்கு அடிபணிதல் உன் கடமை" என்பதற்கும் "கடவுள் பாஷை எங்களுடையது. புரோகிதர் பேச்சிற்குத் தலையாட்ட வேண்டும்" என்ற பல்லவர் கால ஆணைக்கும் என்ன வேற்றுமை? அரசாங்க மொழியைப் பயில்வதில் லாபகரமான விஷயங்கள் பல உண்டு என்பது இப்போதும் தெரிந்ததுதானே.

ஆனால் வேதம் என்ற சொல்லை பயன்படுத்துவதன் மூலம் யாரும் வேதக் கடவுளரை வணங்கவில்லை - போற்றவும் இல்லை. தங்கள் கடவுளரைப் பற்றிய பாடல்களில், போற்றிப் பாட - கிறிஸ்தவர் பிற்காலத்தில் வேதாகமம் என்று பயன்படுத்தியது போல - தேவன், கர்த்தர் என்பன போன்றே பயன்படுத்தப்பட்டது. வேதநாயகன் என்றும் வேதம் தமழ் செய் மாறன் சடகோபன் என்றும் சொல்லப்பட்டிருப்பதிலேயே ஒரு விநோதம் தெரிகிறது. வைதிகத்தை மீறி நாவுக்கரசரும் நம்மாழ்வாரும் வேதங்களைப் படித்திருக்க முடியுமா? அப்படிப் படித்து அறிந்திருந்தால் அவர்கள் வைதிகத்தை மதித்தவர்கள் ஆவார்களா? மேற்படி இருவரும் தமிழ்நாட்டில் மருத நிலத்தில் வாழும் பிரிவைச் சேர்ந்திருந்தாலும் வைதிகத்தின்படி நாலாமவர் அல்லவா?

சரி, சமயம் என்று தெரிந்து, அதாவது இதுதான் நமது மதம் என்று கருதி, வேதம் - வேதநாயகன் என்றெல்லாம் சொல்லி மகிழ்ந்தார்கள் என்றால், சைவ சித்தாந்தமும் வீரசைவம் போன்ற சமயங்களும் வேதங்களை அதாவது பிராமண மதக்கொள்கைகளை மையமாகக் கொண்டு நிற்பவற்றை ஏற்றுக் கொண்டிருக்கின்றனவா? இல்லவே இல்லை. வேதங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை - அவதார ராமனையும் ஏற்றுக் கொள்ளவில்லை. சைவ சித்தாந்தக் கொள்கைப்படி கடவுள் அவதாரம் எடுப்பதில்லை. புறநானூற்றில் ராமன் பெயர் சாதாரணமாகத்தான் வந்துள்ளது. வரக்கூடாது என்றும் சொல்ல முடியாதே.

கோயில்கள் இல்லாத காலத்தில் கடவுளை வணங்கியது எப்படி என்று பார்த்தோமானால் இது பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முடியும். பூர்வகுடி மக்கள் தீயை வணங்கி இருக்கிறார்கள். அந்த வழிபாடு, அதற்கு முன்பாக அந்த மக்கள் இரவு நேரத்தில் தீ வளர்த்து, அதைச் சுற்றி உட்கார்ந்து தங்கள் முன்னோர் பாடிய பாடல்களைப் பாடியதைப் பற்றி எழுந்த வழக்கமாகும். இவ்வழக்கம் உலகின் எல்லா இனத்து மக்களிடமும் காணப்படும் ஒன்றுதான்.

இந்த வணக்கத்தில் முதல் ஸ்தானம் கொண்ட "தீ" தான், பின்னர் மண்ணிலோ கல்லிலோ ஆக்கப்பட்ட இலிங்கம் என்பது ஒரு சைவ சித்தாந்தக் கொள்கை. தளி - கற்றளி என்றும் பிற்காலத்தில் கருவறையில் கடவுள் ஸ்தானம் பெற்றது என்றும் தெரிய வருகிறோம். அப்படியானால் ஆரியர் சிவலிங்கத்தை இழிவுபடுத்தியதில் வியப்பில்லை. ஐரோப்பியர் இந்த நூற்றாண்டுகளில் இலிங்கத்தை Phallus God என்று பரிகசித்தமைக்கும் அன்று ஆரியர் பூர்வகுடியின் கடவுளை இகழ்ந்தமைக்கும் என்ன வேறுபாடு?

தீ வணக்கம் வேறு முறையில் "யக்ஞம்" என்ற பெயரில் ஆரியர் நடத்த முன் வந்தது ஒரு தந்திரம். தங்கள் தலைவரான இந்திரன், மித்ரன், வருணனை மரியாதை செய்ய ஆரம்பித்தனர். இது இன்னுங்கூட நமது அம்மன் கோவில்களில் பூசனை நடத்தி, முதல் மரியாதைப் பிரசாதம் ஒரு குறிப்பிட்ட பிரமுகருக்குத் தருவது போன்றதுதான். முதல் மரியாதை பெறுவரில் போட்டி உண்டாவதும் நமக்குத் தெரிந்ததுதான். முதல் மரியாதை பெறுவரில் போட்டி உண்டாவதும் நமக்குத் தெரிந்ததுதான். ஆரியர் தங்கள் தலைவர்களுக்கு மரியாதை செய்து வந்தது, வெகுகாலம் நடக்கவில்லை. பூர்வகுடி மக்களின் தலைவரான சிவன் - நாராயணன் போன்றோருக்குத்தான் அந்த மரியாதை நடக்க வேண்டும் என்ற சண்டை ஆரம்பமானதின் விளைவுதான் யாகத்தில் இந்திரன் போன்றோர் பின் தள்ளப்பட்டு, குடி மக்களின் விருப்பம் நடைமுறைக்கு வந்தது. அப்படியிருந்தும் கூட வேத மக்களின் புத்திசாலித்தனமும் தந்திரமும் வென்றுவிட்டது. "யாரை வேண்டுமானாலும் கௌரவித்துக் கொள்ளலாம் - ஆனால் வேதத சுலோகங்கள் சொல்லித்தான் அதைச் செய்ய வேண்டும்" என்ற நிபந்தனையைப் பின்பற்றச் செய்தனர். அதன் விளைவுதான் இன்று சம்ஸ்கிருதம் பெற்றுள்ள போலிக்கவுரவம்.

"நீங்கள் உங்களது தாய்மொழியைப் படித்துக் கொள்ளலாம். ஆனால் அரசுப் பணிக்கு வர வேண்டுமானால் ஆங்கிலம் படித்திருக்க வேண்டும்" என்ற ஆங்கில ஆட்சி ஆணையும் மேற்படி சமஸ்கிருதம் பயன்படுத்த வேண்டுமென்ற நிபந்தனையும் ஒன்றுதான் என்று தெரிகிறதல்லவா?

மேலும் அந்த மொழி சமஸ்கிருதம் இருக்கிறதே: அதை பூர்வகுடி மக்கள் அந்தச் சமயத்தில் வெறுக்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. தங்களுடைய மொழியின் சொற்கள் பலவும் கலந்துண்டான மொழிதான் என்றும் அவர்கள் இருந்திருக்கக் கூடும். சிவன் - நாராயணன் என்ற தலைவர் பெயர்களே பூர்வகுடி மக்களின் மொழிதானே.

நம் காலத்தில் நடராசர் நடனத்தை Cosmic Dance என்று ஆனந்த குமாரசாமி புத்தகம் எழுதினால் அது ஆங்கிலம் ஆயிற்றே என்று தள்ளிவிடவா செய்கிறோம்? God Almighty என்று போப் அவர்கள் சிவனது முழுமுதல் தன்மையைக் கூறினால், மகிழ்ச்சிதானே.

வேதம் - வேதநாயகன் என்றதும் இதைப் போன்றதுதான்.

வர்ணாசிரம தர்மம்

ஆரியர் சென்ற பலவிடங்களில் சாதி என்ற அமைப்பு ஏற்படவில்லை - இங்கு மட்டுந்தான் வர்ணாசிரமம் இருக்கிறது - இதிலிருந்து இந்த அமைப்புமுறை தமிழர்களிடம் ஏற்கனவே இருந்தவொன்று - ஆரியர்கள் நாடோடிகளானபடியால் இம்மாதிரி வேற்றுமை இருந்திருக்காது - என்று சமத்கார ஆராய்ச்சி பண்ணும் வித்தகர்கள் ஒன்றைப் பற்றி மட்டும் மூச்சு விடுவதில்லை. அவர்கள் சென்ற மற்ற இடங்களும் குளிர்ப் பிரதேசங்கள்தாம். அங்கிருந்த மக்களும் வேறுபாடுடையவர்கள் அல்லர். நிறவேற்றுமையும் கிடையாது. எனவே, இன ரீதியான பிரிவுகள் ஏற்பட வழிகள் அநேகமாக இல்லை. அங்கும் செல்வம், வசதி இவை குறித்தான பிரிவுகள் ஏற்பட்டு இன்னமும் நிலவுகின்றன.

இங்கே அப்படியல்ல. சூத்திரன் கறுப்பு, வைசியன் மஞ்சள், சத்ரியன் சிவப்பு, பிராமணன் வெள்ளை என்று ஸ்மிருதிகள் வரையறை செய்ய வேண்டிய அளவு இன ரீதியிலான வேற்றுமை. இங்கே என்றால் தமிழ்நாட்டில் அல்ல என்பதையும் சொல்லியாக வேண்டும்.

வடக்கிலிருந்து புறப்பட்ட கூட்டம் நேராக இங்கே அக்ரஹாரத்தில் வந்து குடியேறிடவில்லை. ஒருவேளை புறப்பட்ட மனிதனின் கொள்ளுப்பேரன்கூட இங்கே வந்திருக்க முடியாது. இடைப்பட்ட எல்லா இடங்களின் கலாச்சாரங்களையும் சுமந்து கொண்டுதான் வந்தனர். ஸ்விட்சர்லாந்தின் தலைநகரமே மழைக்கடவுள் "வருணன்" பெயர்தான். நார்வே, ஈரான் என்பதெல்லாம் "ஆரிய" என்பதன் அடையாளம்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, "ஐரோப்பா" என்னும் ஆங்கில உச்சரிப்புக்கூட ஆர்யோப்பியா என்னும் சொல்தான். இந்திரன், மித்திரன் எல்லாம் ஈரானியத் தலைமைக் கடவுளர். இக்கடவுளருக்குதான் வேதம் வணக்கம் சொல்கிறது. பூர்வகுடி மக்களுக்கும் கடவுளர் உண்டு. கடவுள் என்ற சிந்தனை மனித இனங்கள் எல்லாவற்றிலும் காலங்காலமாக இருந்து வந்துள்ளது.

இந்திரனை மேலான ஒரு கடவுளாகக் கொண்ட மக்களுக்கு, விஷ்ணு பிற்காலத்தில் துணைக் கடவுளாகவே தெரிகிறார். ஒரு விதத்தில் விஷ்ணு இந்திரனின் வேலைக்காரர் என்று சொல்வது சரியாகவேயிருக்கும். சிவனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நந்தி, சிவன் போன்றவர் த்ரவிட் கடவுளர் ஆவர். இந்த நந்தி தேவரை ஆதியாகக் கொண்டதுதான் பிற்காலத்தில் சமணம் என்று பேர் பெற்ற மதம். சிந்துவெளி நாகரிகத்தில் சொல்லப்படும் "பணியர்" தானியங்களை விற்று வாணிபம் செய்து வந்த மக்கள். பிற்காலத்தில் பணியா என்று வியாபாரிகளைக் குறிக்கும் பெயர் இதிலிருந்துதான் வந்திருக்கும்.

இந்தப் பணியர்களுடன் ஆரியர்கள் நடத்திய போர்கள் பற்றி ரிக் வேதம் நிறையக் கூறுகிறது. பணியர்களை ஆரியர் வெறுத்தனர். பணியர்கள் வாணிபத்திற்காகக் கடல் கடந்து சென்று தங்கம் முதலியவற்றோடு புழங்கியவர்கள். ஆரியருக்கு கால்நடை தவிர எதுவும் தெரியாது. ஆனால் தங்கம் கிடைத்தது.

நூறு கோட்டைகளைக் கொண்ட கறுப்பு நிறத்தோரை ஆரியர்கள் சுலபமாக வெற்றி கொள்ள முடியவில்லை என்று ரிக் வேதம் கூறும். இக்காலம் ஏறக்குறைய கி.மு.1500. இது வரை வர்ணாசிரம முறையொன்று ஆரியருக்கு ஏற்பட காரண காரியம் எதுவுமில்லை. பிராமணர் என்ற சாதியும் இல்லை.

வர்ணாசிரம முறை ஆரியர்க்கு இல்லை என்று ஆய்வுரை நடத்தும் பேர்வழிகள், இதன் பின்னர் நடந்த மாறுதலைத்தான் இருட்டடிப்பு

 
புகைப்படங்கள்




ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved