மா. அரங்கநாதன் இலக்கிய தடம்
மா.அரங்கநாதன் தமிழ்ச் சிறுகதை படைப்புவெளியில் ஒரு அபூர்வ நிகழ்வு. புதுமைப்பித்தன், மௌனி, குபரா கொடிமரபில் தழைத்து வளர்ந்த தமிழ் சிறுகதையின் தொடர்ச்சியில் சங்க இலக்கியத்தின் உள்ளார்ந்த கவித்துவப் பண்பும், தமிழ் சைவசித்தாந்தத்தின் சொல்லாடல் இழையோடும், அதிநவீனத்துவ கதையாடலின் பண்போடும் கூடியவை இவரது சிறுகதைப் பிரதிகள். இவரின் சிறுகதைகள் அனைத்தும் ஒரு தொகுதியாக “முத்துக்கறுப்பன் எண்பது” தொகுக்கப் பெற்று வெளிவந்துள்ளது. மா. அரங்கநாதனது முழு சிறுகதையும் ஒரே தொகுதியாக வெளிவரும் இத்தருணத்தில் அவரது படைப்புகள் குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுதியினை கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இன்றைய திறனாய்வாளர்களின் கோட்பாட்டு நோக்கில் அவரது படைப்புகளை எவ்வாறு வாசிப்பது, எவ்வகை நவீனத்துவப் – பின்நவீனத்துவப் – பண்புக்கூறுகள் அவரது படைப்புகளில் பிரதியாக்கப்பட்டிருக்கிறது என்பதை தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு அளிக்கும் நோக்குடன் இத்தொகுப்பு திட்டமிடப்பட்டுள்ளது. தமிழின் மூத்த தலைமுறை கதையாளர்கள் இவரது படைப்பாக்கம் குறித்து எழுதியிருப்பினும், இன்றைய இலக்கியத் திறனாய்வுக் கோட்பாட்டின் வளர்ச்சியில், இவரது படைப்புகளை எவ்வாறு பன்முக வாசிப்புக்கு உட்படுத்தலாம் என்ற சாத்தியத்தை வெளிக் கொண்டுவர இத்தொகுப்பு அமைக்கப்படுகிறது.
இத்தொகுப்பிற்கு பல்வேறு கோட்பாட்டுப் பின்னணியைச் சேர்ந்த திறனாய்வாளர்களிடமும், படைப்பாளிடமும் கட்டுரைகளை வரவேற்கிறோம்.
தொடர்புக்கு : S. SHANMUGAM
Old No.56/3, New No.28, Mohammed Hussain Street,
Royapettah, Chennai – 14.
Mob : 9884945757
e-mail : s.shanmugam65@gmail.com
