மா. அரங்கநாதன் இலக்கிய விருதுகள்

பல்லாயிரமாண்டு கலாச்சாரமும், தத்துவ விசாரமும் தன்னுளடக்கி கவிதை, சிறுகதை, நாவல், கலைகள் எனப் படைப்பின் அனைத்துத் தளங்கள் பற்றியும் தீர்க்கமான பார்வை கொண்ட தனித்துவமிக்க படைப்பாளி மா. அரங்கநாதன். நுட்பமான கலையும் படைப்பாற்றலுமாக எழுந்து நிற்பவை அவருடைய படைப்புகள்.

அவரது நினைவை ஒட்டி 2018 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 16ஆம் தேதியன்று மா. அரங்கநாதன் இலக்கிய விருதுகள் முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் வழங்கப்படுகின்றன.

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம். மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமர்சனம் என இலக்கியத் துறையில் பல்லாண்டுகளாகப் பங்களித்து வரும் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு அவர்களுடைய ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்பு, செயற்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.விருதுடன் தலா ஒரு லட்சம் கொண்ட ரொக்கப் பரிசும் சேர்த்து வழங்கப்படுகிறது.

படைப்புலகில் இயங்கும் அனைவராலும் உயரிய விருதாகக் கருதப்படும் மா. அரங்கநாதன் இலக்கிய விருது 2025ஆம் ஆண்டிற்காக பேராசிரியர் தமிழவன் மற்றும் ப. திருநாவுக்கரசு ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகிறது.

மா. அரங்கநாதன் இலக்கிய விருது 2018
மா. அரங்கநாதன் இலக்கிய விருது 2019
மா. அரங்கநாதன் இலக்கிய விருது 2022
மா. அரங்கநாதன் இலக்கிய விருது 2023
மா. அரங்கநாதன் இலக்கிய விருது 2024

ஆவணப்படம்

புகைப்படங்கள்

Scroll to Top