
மா. அரங்கநாதன்
இலக்கிய விருது
2025
பல்லாயிரமாண்டு கலாச்சாரமும், தத்துவ விசாரமும் தன்னுளடக்கி கவிதை, சிறுகதை, நாவல், கலைகள் எனப் படைப்பின் அனைத்துத் தளங்கள் பற்றியும் தீர்க்கமான பார்வை கொண்ட தனித்துவமிக்க படைப்பாளி மா. அரங்கநாதன். நுட்பமான கலையும் படைப்பாற்றலுமாக எழுந்து நிற்பவை அவருடைய படைப்புகள்.
அவரது நினைவை ஒட்டி 2018 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 16ஆம் தேதியன்று மா. அரங்கநாதன் இலக்கிய விருதுகள் முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் வழங்கப்படுகின்றன.
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம். மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமர்சனம் என இலக்கியத் துறையில் பல்லாண்டுகளாகப் பங்களித்து வரும் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு அவர்களுடைய ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்பு, செயற்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.விருதுடன் தலா ஒரு லட்சம் கொண்ட ரொக்கப் பரிசும் சேர்த்து வழங்கப்படுகிறது.
படைப்புலகில் இயங்கும் அனைவராலும் உயரிய விருதாகக் கருதப்படும் மா. அரங்கநாதன் இலக்கிய விருது 2025ஆம் ஆண்டிற்காக பேராசிரியர் தமிழவன் மற்றும் ப. திருநாவுக்கரசு ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகிறது.
மா. அரங்கநாதன்
இலக்கிய விருது
2025

நாள் : 16.04.2025
புதன்கிழமை மாலை 6.15 மணி
இடம்: ராணி சீதை அரங்கம்
603, அண்ணா சாலை, (ஜெமினி மேம்பாலம் அருகில்),
சென்னை-600 006
அம்சா சண்முகம்
கர்நாடக இசை மற்றும் தேவாரப் பண்ணிசைக் கலைஞர்சுஜாதா நடராஜன்
அறிவியல் எழுத்தாளர் – திரைப்பட விமர்சகர்எஸ்.சண்முகம்
கவிஞர் – விமர்சகர்ரவிசுப்பிரமணியன்
கவிஞர் ஆவணப்பட இயக்குனர்‘மா. அரங்கநாதன்’ மற்றும் ‘முன்றில்’ வலைதளங்களை
வெளியிட்டு சிறப்புரைமாண்பமை உச்சநீதிமன்ற நீதியரசர் அரங்க.மகாதேவன்
பேராசிரியர் தமிழவன்
ப.திருநாவுக்கரசு

பேராசிரியர் தமிழவன்
தமிழின் முக்கிய படைப்பாளியாக, கல்வியாளராக, திறனாய்வாளராக, இதழாளராக, நவீன இலக்கியத்தில் புதிய சிந்தனைக் கோட்பாடுகளை, இலக்கிய அமைப்புகளை உருவாக்கியவராக அறியப்படும் பேராசிரியர் தமிழவன் பல்வேறு கல்லூரிகள் மட்டுமின்றி பெங்களூர் பல்கலைக்கழகம், ஆந்திர திராவிடப் பல்கலைக்கழகம் மற்றும் போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். 50 ஆண்டுகால இலக்கியப் பரிச்சயத்தினாலும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் பெற்ற பாண்டித்தியத்தினாலும் படைத்த கட்டுரைகள், விமர்சனங்கள், நாவல்கள், சிறுகதைகள் மூலம் இவர் ஓர் இலக்கியப் பேராளுமையாகத் திகழ்கிறார்.

ப.திருநாவுக்கரசு
தமிழிலக்கியப் பரப்பில் பதிப்பாளராக, கட்டுரையாளராக, தமிழிசை குறித்த ஆய்வாளராக, திரைக்கலையின் பல்வேறு படைப்புகளின் தொகுப்பாளராக, இசையுலக ஆளுமைகளின் வரலாற்றை பதிவு செய்தவராக அறியப்படுபவர் ப.திருநாவுக்கரசு. 40 ஆண்டுகளாக இலக்கியப் பரப்பில் தொடர்ந்து இயங்கும் இவரது புலம்பெயர்ந்தோர் கவிதைகள் தொகுப்பு, சினிமா (தொகுப்பும் ஆக்கமும்) திரை இசையில் தமிழிசை உள்ளிட்ட படைப்புகளும், குறும்படங்கள் குறித்த இவரது 75க்கும் அதிகமான பட்டறைகளும், ‘நிழல்’ பத்திரிகையும் குறிப்பிடத்தக்கவை.