Girl in a jacket

மா. அரங்கநாதன் இயற்கையெய்தினார்...



தொன்மை, நவீனம், இலக்கியம், மொழி, படைப்பு, சித்தாந்தம் பற்றி,தமிழ்ப் படைப்புலகின். மிகுந்த தனித்துவமும் கலைத்துவமும் கொண்.ட எழுத்தாளர். மா. அரங்கநாதன். தமது வாழ்வனுபவத்தையும் தத்துவார்த்தத்தையும். உள்ளடக்கி படைப்பின், பெருவெளியாகத் திகழும் கதைகள் மா. அரங்கநாதன் கதைகள்.

வாழ்வின் போக்குகளை - அதன், வர்ண ஜாலங்களை - வார்த்தைகளுக்கு அகப்படாத தன்மைகளை - தமிழ்மொழியின் இன்னுமொரு ஆற்றலாக வடித்தெடுத்திருக்கும் சொல்லாடல் - தமிழின் ஆகச்சிறந்த புதியதொரு படைப்புவெளி மா. அரங்கநாதன் கதைகள்.

பழமையும் நவீனமும் தோய்ந்த படைப்புகள் மூலம் உலகளந்தவர் மா. அரங்கநாதன்.
மொழி, கலாச்சாரம், மண் சார்ந்த இவரது ஆளுமை இணையற்றது.

05-11-1932 இல் நாகர்கோயிலை அடுத்த திருவெண்பரிசாரத்தில் (திருப்பதிசாரம்) பிறந்து 50 ஆண்டுகாலங்களுக்கும் மேலான சென்னை வழ்க்கைக்குப்பின் தற்போது புதுச்சேரியில் வசித்து வந்தார். மா. அரங்கநாதன்.

நான்கு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், நான்கு கட்டுரைத் தொகுப்புகள், ஒட்டு மொத்த தொகுப்பான மா. அரங்கநாதன் கதைகள் (நற்றிணை), முன்றில் இலக்கிய இதழ், நேர்காணல்கள் என்ற பங்களிப்போடு தொடர்ந்து இயங்கிவந்தார்.

இவரது 86 சிறுதைளை திருமதி. சாந்தி சிவராமன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.
இவரது படைப்புகள் பவேறு விருதுகள்பெற்றும்  பல்கலைக் கழகம் பாடமாக்கப்பட்டும் உள்ளன.

முத்துகறுப்பன் என்னும் மாந்தனை -மாந்தர்களை - ஏகனாக - அநேகனாக உலகுக்களித்தவர்; இன்றைய   படைப்பாற்றலை  சங்க இலக்கிய சரடில் கோர்த்தவர். மா.அரங்கநாதன் அவர்கள் 16 - 04 - 2017 இல் இயற்கை எய்தினார்.

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved