மா. அரங்கநாதன் படைப்புகள் குறித்து  கோணங்கி

மா. அரங்கநாதன் படைப்புகள் குறித்து... - கோணங்கி மா. அரங்கநாதனின் அரணை சிறுகதையில் குன்றத்தூர் சிவனேசன் ஆறு வீடுகளே கொண்ட காம்பவுண்ட் வீடுகளுக்கு ஜவப்தாரியாகிறார். அவரோ தன்னை குன்றத்தூர் இரண்டாம் சேக்கிழாராக கருதுவதால் இங்கே குடி வருபவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மாமிசம் சாப்பிடுபவராக இருந்துவிடக் கூடாது. மூன்று நான்கு குடித்தனங்களிலும் ஒருவர் வெளியில் அதை சாப்பிடுவதாக துப்பு கிடைக்கிறது. சைவம் தழைக்க வந்த ஒருவரை மூதாதையராகக் கொண்டு விட்டு இதை நிலை நாட்ட முடியவில்லையென்றால் எப்படி?

குன்றத்தூர் சிவனேசன் அரணையின் குறியீடாகிறார். அரணையாகிறார். இக்கதையின் பகடியாக்கத்தில் முத்துக்கருப்பனும், காலியான வீட்டிற்கு குடி வருகிறான்.

மா. அரங்கநாதன் சிறுகதைகளில் “முதற்தீ எரிந்த காடு, வீடுபேறு, மைலாப்பூர், உவரி, மகத்தான ஜலதாரை” மறதியின் நுழைவு வாயிலுக்குள் வந்துவிட்ட முத்துக்கறுப்பன் நிழல் தமிழ் நில மறதியின் குறியீடாக முடிவற்று, ஒவ்வொரு கதையிலும் நுழைகிறான், நாளைக்கான இன்றின் புனைகதைகளின் எதாஸ்தனத்தில் வீற்றிருப்பவனோ புதுமைப்பித்தன், மூத்த கதைக்காரர்கள், ரிஷிகள், சூழ புனைகதையாளன் வேறு வெளியில் இருக்கிறான். முத்துக்கறுப்பன் பலராகவும் இருக்கலாம். பன்மை பிரதியாக்கத்திற்கு பெர்னாண்டோ பெஸோவா எழுபத்திரண்டு பேர்களானததில் புஸ்தகங்களும் வேறு. ஆனால் முத்துக்கறுப்பன் ஏகனாக இருப்பது மா. அரங்கநாதன் கதைகளின் விதி. அநேகனாக இருப்பது பெர்னாண்டோ பெஸோவா. முத்துக்கறுப்பன் வேறு வேறு பெயராகவும் பாகாய பிரதேசம் செய்திருக்கலாம்.

ஆற்று வழியில் கடந்தேகி மணலில் மூழ்கி இருந்தாலும், சதாசிவ பிரம்மத்தைப்போல கதைகளுக்குள் இருட்டிக்கொண்டு ஊடுருவுகிறான் முத்துக்கறுப்பன். ஊமையாக ஆற்று நெடுக எதிர் நீச்சல் போட்டு முத்துக்கறுப்பன் வந்து கொண்டிருக்கிறான். தமிழ் மூலகத்தின் கீறல்களில் உதிர்ந்த சிறிதுகளில் போர்த்தங்கள் செதுக்கி வடிவமைக்கக்கூடிய “தொலைவிலுணருதல், மற்றும் உவரி”. இக்கதையின் தொல்மறதியில் சாலமோனின் இவ்வளவான கப்பல்கள் ஒபிர் நோக்கி வ்ருவதையும், உவரிக்கதையில் வண்டி ஒரு சிறு ஊரைக் கடந்தது. அது உப்பளங்கள் நிறைந்த இடமென அவன்அறிந்திருந்தான். உப்பு வண்டி ஏற்றிச் செல்லும் மக்களைக் காண ஆவல் தோன்றியது. வண்டிகள் காலம் காலமாக இருந்திருக்கின்றன. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. உப்பு வேலுரிலிருந்து, சோபப்பட்டினத்திலிருந்தும், கமராவிலிருந்தும் ஒபிருக்கு உமணர்கள் சகடத்தில் வரக்கூடும். சக்கரத்தில் ஆரங்கள் அசோகன் காலத்திலிருந்து இன்னும் மாறாமல் இருப்பது. அதன் ஒரு சுற்றுக்கு 96 ஆரங்களைக் கால கணிதமாக்கி கதைகளுக்குள் தொன்மத்தை உலவ விடுகிறார் மா. அரங்கநாதன்.

நாளைக்கான தமிழ்ப் புனைகதைகளில் ஆண்டன் செகவின் நீல நுரையீரல் வரைபடம் கல்குதிரை - 21 பனிக்கால இதழ்.

 

 

 
முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...

மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved